
பெரியகுளம், மே 20- ஜூன் 6 தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியகுளம் வருகை மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து கலந்துரையாட கூட்டம் பெரியகுளம் பெரியார் புத்தக நிலையத்தில் நடைபெற்றது
பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் தலைமையில், மாவட்டத் தலைவர் ம.சுருளிராசு வரவேற்புரையாற்ற, மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு
இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர்
இரா.செந்தூர்பாண்டியன் கருத்துரை வழங்கினர்.
மாவட்ட துணை செயலாளர் லோ.முத்துசாமி, கழக பேச்சாளர் செ.கண்ணன். துணைத் தலைவர் ச நாகராஜன், ஆண்டிச்சாமி, ஆதித்தமிழன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய தமிழர் தலைவருக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது.
விடுதலைச் சந்தா பெருமளவில் வழங்க வேண்டும் முதலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை புறநகர்
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜூன் 7ஆம் தேதி, மதுரை புறநகர் மாவட்டம், மேலூரில் சிறப்புரையாற்ற வருகை தருகிறார்கள்,
அதனை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மேலூரில் 17-05-2026 அன்று மாலை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது,
கூட்டத்திற்கு த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) தலைமை வகித்தார். லெ வீரமணி (மேலூர் நகர தலைவர்) வரவேற்புரையாற்றினார். உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாநில மணவர் கழக செயலாளர்) கருத்துரையாற்றினர்.
பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) முன்னிலை வகித்தார்.
இரா. கலைச்செல்வி (மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர்), வேம்பத்தூர் ஜெயராமன் (பெரியார் பெருந்தொண்டர்), அரிட்டாபட்டி செல்வம் பங்கேற்றனர்.
மேலூர் நகர செயலாளர் க. பெரியசாமி நன்றி கூறினார்.
தீர்மானம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பொதுக்கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்துவது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
