நாகர்கோவில், மே 19- குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நாகர்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம், மாவட்டச்செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், திராவிடர்கழக பொறுப்பாளர்கள் ஞா.பிரான்சிஸ், இலக்கிய அணி செயலாளர் பா பொன்னுராசன், குமரி நகர செயலாளர் க.யுவான்சு, கோட்டாறு பகுதி தலைவர் ச.ச..மணிமேகலை, வில்லுக்குறி செல்லையன் ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர் பகுத்தறிவாளர் கழக வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து பகுத்தறிவாளர்கழக மாநில தலைவர் தமிழ்ச் செல்வன் விரிவாக சிறப்புரையாற்றினார். திராவிடர்கழக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் நன்றியுரையாற்றினார்.
