போக்சோ வழக்கில் ஒன்றிய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்குமாரின் மகன் கைது!

அய்தராபாத், மே 18 ஒன்றிய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்குமாரின் மகன் பண்டி பகீரத், போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக பண்டி பகீரத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தன் மீதான கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி பண்டி பகீரத் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில்   மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தெலங்கானா காவல்துறையினர் பண்டி பகீரத்தை உடனடியாகக் கைது செய்துள்ளனர். ஒன்றிய அமைச்சரின் மகன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *