.
கொழும்பு, மே 17 – “மதவாதச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்” தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பாராட்டு தெரி விக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூஃப் ஹக்கீம்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு அபார வளர்ச்சி யைக் கண்டதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூஃப் ஹக்கீம் பாராட்டியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உலக அளவில் தமிழ்பேசும் மக்களை ஒன்றி ணைத்து அயலகத் தமிழர் தினத்தை அரசு சார்பில் கொண்டாடியவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்காக எண்ணற்றத் திட்டங்களை மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு நிறை வேற்றியது என்றும் அவர் கூறினார்.
மதவாத சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, தமிழ்நாட்டை அமைதிப் பூங்கா வாக வைத்திருந்தவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்றும் தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் தொழில் முதலீடுகள் வந்ததையும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
