‘வாட்ஸ் அப்’பில் உலா வரும் செய்தி! ‘பக்தி வேற – பாலிடிக்ஸ் வேற!’ பாக்கெட்டில் கலைஞர் படம்… நெற்றியில் விபூதி… நிர்மலா சீதாராமனின் “பட்ஜெட்” புலம்பல்கள்!

2 Min Read

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்றாலே ‘கறார்’ பேர்வழி என்பது உலகறிந்த விஷயம். ஆனால், சமீபத்தில் தமிழ்நாடு பாஜகவின் ‘அமைப்பு சாரா தொழிலாளர் அணி’ நிர்வாகிகள் கொடுத்த ஒரு அய்டியாவைக் கேட்டு, அவர் காட்டிய விஸ்வரூபம் இருக்கிறதே… அது நிஜமாகவே ஒரு பட்ஜெட் உரையை விட அதிரடியாக இருந்திருக்கிறது.

ஆட்டோவும்பரப்புரையும்அப்புறம் ஆப்பும்!

திட்டம் இதுதான்: “அக்கா… நம்ம ஆட்டோ டிரைவர்களுக்கும், டாக்ஸி டிரைவர்களுக்கும் வாரி வழங்கி, அவங்க மூலமா கம்மியான ரேட்டுக்கு வண்டி ஓட்டி, வர்ற ஜனங்க கிட்ட எல்லாம் ‘தாமரை மலரப் போகுது’ன்னு தாரை தப்பட்டை அடிக்க வைக்கலாம்” என்பதுதான் அந்த ‘புதிய புராஜெக்ட்’.

இதை கேட்டதும் நிர்மலா அக்காவுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் ‘பிளாஷ்பேக்’காக வந்து போயிருக்கிறது. ஏற்ெகனவே “சிறு தொழில் தொடங் குங்க”ன்னு லோன் கொடுத்தா, லோன் வாங்குற வரைக்கும் “பாரத் மாதா கீ ஜே”ன்னு கோஷம் போட்டவங்க, காசு கைக்கு வந்ததும் “டாட்டா” காட்டிட்டு போயிட்டாங்களேங்கிற ஆதங்கம் அவருக்குள் எரிமலையாய் வெடித்தது.

நிர்மலா அக்காவின்ரியாலிட்டி செக்

அந்த நிர்வாகிகளைப் பார்த்து நிர்மலா சீதாராமன் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் தமிழ்நாடு அரசிய லின் எதார்த்தத்தைப் போட்டு உடைத் திருக்கிறது:

“எதை நம்பி நான் காசு தருவது? கோவிலுக்குப் போய் பயபக்தியா நெத்தியில குங்குமம், விபூதி எல்லாம் வச்சுட்டு சாமி கும்பிடுற பல பேர், சட்டைப் பையில கலைஞர் படத்தை வச்சிருக்கிறதை நான் கண்ணாரப் பார்த்திருக்கேன்! அவங்க கிட்ட உங்க ‘ஆட்டோ பரப்புரை’  பருப்பு வேகாது!”

அதாவது, “பக்தி வேற… பாலிடிக்ஸ் வேற”ன்னு தெளிவா இருக்கிற தமிழ்நாட்டு மக்களோட பல்ஸை அக்கா துல்லியமா கணிச்சு வச்சிருக்காங்க. “வெளில பார்க்க நம்ம ஆளுன்னு நினைப்போம், ஆனா உள்ளுக்குள்ள அவங்க வேற ரூட்ல இருக்காங்க”ன்னு அக்கா போட்ட போடு, வந்திருந்த நிர்வாகிகளுக்கு ‘பல்ப்’ எரிய வைத்தது.

தேர்தல் முடியட்டும்அப்புறம் பார்க்கலாம்!”

கடைசியாக, “தேர்தல் முடியுற வரைக்கும் இனிமே காசு கேட்டு என் பக்கம் தலைவச்சுப் படுத்துறாதீங்க… வேற வழியில போய் யோசிங்க”ன்னு சொல்லி, வந்தவங்களை ‘கெட் அவுட்’ பண்ணி அனுப்பிட்டாராம்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத நெல்லையைச் சேர்ந்த அந்த நிர்வாகி, “என்னப்பா இது… அக்கா இப்படி ஒரு ‘கட்’ சொல்லிட்டாங்களே”ன்னு வாட்ஸ்அப் குரூப்களில் ஸ்டேட்டஸ் போட்டு கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறாராம்.

லோன் கொடுத்தா ஓட்டு வரும்னு நினைக்காதீங்க… ஏன்னா, பையில கலைஞர் இருக்காரு, நெத்தியில விபூதி இருக்கு, ஆனா உங்க பட்ஜெட்ல காலி டப்பா மட்டும்தான் இருக்கு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *