சென்னை, மே 17- தவெக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுவதாக விவசாயி ஒருவர் சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய அரசை விமர்சித்த ஜோசப் விஜய்; இப்போது நடப்பது என்ன? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த காணொலியால் விவசாயி பேசியிருப்பதாவது:
“தவெக தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது, டெல்டா மாவட்ட கொள்முதல் மய்யங்களில் நெல் மூட்டை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய 40 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும், முந்தைய அரசு விவசாயிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் தரகு வாங்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், தற்போது தவெக அரசுதான் ஆட்சியில் உள்ளது. இப்போது நெல் மூட்டைக்கு 60 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது.”
கெஞ்சும் அவல நிலை
தொடர்ந்து பேசிய அந்த விவசாயி, தனது சொந்தப் பாதிப்பைக் கண்ணீருடன் விவரித்தார். “நான் 170 நெல் மூட்டைகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தேன். என்னிடம் இருந்து 10,000 ரூபாய் வரை லஞ்சமாகப் பெற்றுள்ளனர். நியாயப்படி நான் நெல்லை விற்பதால் அரசுதான் எனக்குப் பணம் தர வேண்டும். ஆனால், நானே அரசுக்குப் பணம் கொடுத்து, ‘என் நெல்லை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கெஞ்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது” என்று வேதனை தெரிவித்தார்.
இந்த ஊழல் பணம் யாரு டைய கைக்குச் செல்கிறது என்ற அடுக்கடுக்கான கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்:
பணம் எங்கே போகிறது?: “விவசாயிகளிடம் இருந்து சுரண்டப்படும் இந்த லஞ்சப் பணம் முதலமைச்சர் விஜய் அரசுக்குச் போகிறதா? அல்லது உள்ளூர் சட்டமன்ற உறுப்பினருக்குப் போகிறதா? இதற்கு முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்.”
அனைத்து மாவட்டங்களிலும் முறைகேடு
“நான் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவன். டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கொள்முதல் மய்யங்களிலும் இதேபோலத்தான் பணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு விவசாயியிடம் 10,000 ரூபாய் வீதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் எவ்வளவு பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் ஊழலற்ற ஆட்சி என்று கூறி அதிகாரத்திற்கு வந்த தவெக அரசின் கீழ், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே விவசாயி ஒருவர் பகிரங்க மாகக் குற்றம் சாட்டி காணொலிவெளி யிட்டிருப்பது அரசியல் வட்டா ரத்தில் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது.
