சிங்கப்பூர் பிரபல இலக்கியச் செம்மல் ஜே.எம். சாலி மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் செய்தி!

தமிழ்நாட்டில் பிறந்து, இளம் வயதிலேயே எழுத்தாற்றல், எழுத்தார்வம் கொண்டு உயர்ந்த பெருமதிப்பிற்குரிய பிரபல இலக்கியச் செம்மல் ஜே.எம். சாலி  (எ) ஜமாலுதீன் முகம்மது சாலி (வயது 87)  அவர்கள் பழைய தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையில்  பிறந்து தமது 25ஆம் வயதில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர்.

‘ஆனந்த விகடன்’, சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’  போன்ற ஏடுகளில் எழுத்துப் பணி செய்து தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்கவைத்த பெருந்தகையாளர்!

தமிழ்நாடு அரசு, சிங்கப்பூர் அரசு மற்றும் பல தனித் தொண்டற அமைப்புகள், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்  ஆகியன சார்பாகவும் விருதுகள் வழங்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டவர். பல தரப்பினரின் பேரன்பினையும், மரியாதையையும் பெற்ற அவர் நேற்றுமுன்தினம் (15.5.2026)  காலமானார் என்பது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; தமிழ் இலக்கிய உலகத்திற்கும்கூட பேரிழப்பாகும்!

பழக இனிய சுபாவம் உள்ள அடக்கமான பண்பாளர்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய உலகத்திற்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

 சென்னை       

 17.5.2026        

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *