சென்னை, மே 16 ஒன்றிய பா.ஜ.க.அரசு பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. விலையை உயர்த்தியதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வா தாரமே கேள்விக் குறியாகப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை வருமாறு:
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக் கான சிலிண்டரின் விலையை உயர்த்தி யதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது.
இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டி ருக்கும் பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. (CNG) விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது.
இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் அவர்கள் தனது கண்டன அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
