தமிழ்நாட்டில் 3ஆவது நாளாக தொடரும் அய்.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை, மே 16- தமிழ்நாடு முதல் அமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக முக்கிய துறைகளில் அய்ஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் 3ஆவது நாளாக இன்றும் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

* உதயநிதி துணை முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாராக இருந்த பிரதீப் யாதவ் அய்டி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

* கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமனம்;

* மீன் வளத்துறை இயக்குநர் முரளிதரன், வேளாண் துறை இயக்குநராக இடமாற்றம்;

* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியராக அப்துல் ரசாக் நியமனம்;

* மாநில மனித உரிமை ஆணைய ராக முருகேஷ் நியமனம்;

* வேளாண் துறை இயக்குநராக முரளிதரன் நியமனம்;

* சிறீபெரும்பதூர் துணை ஆட்சிய ராக நல்லசிவன் நியமனம்;

* கைத்தறி முதன்மை செயலாள ராக டி.என்.வெங்கடேஷ் நியமனம்;

* வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாராக பி.சங்கர் நியமனம்;

* காயத்ரி கிருஷ்ணன் – சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம்;

*              லதா – கூட்டுறவுத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *