சென்னை, மே 14 தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் நியமன விவகாரம், ஒரே நாளில் முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியவர்
மேனாள் முதலமைச்சர் ஜெய லலிதா மீதான ஊழல் வழக்கு நடக் கும் போது ‘‘அது எல்லாம் பிரச்சினை இல்லை; உங்கள் ராசிக்கு நீதி தலைவணங்கும்’’ என்று கதை விட்டார் ஆனால் ஜெயலலிதா சிறைக்குச்சென்றார் இதனால் அவரை சசிகலா விரட்டிவிட்டார். வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழர்களிடம் ஜோதிட வித்தை காட்டினார். அங்கு கிடைத்த பிரபலமான நடிகை ஒருவரின் தயவால் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ஆனார். விஜய் பிரச்சாரம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதும் இவரது ஆலோசனையில் தான் என்று கூறப்படுகிறது
“தமிழ்நாடு இளைஞர்கள் நம்பிக்கையோடு விஜய்க்கு வாக்களித் துள்ளனர். அவர்களை முதலமைச்சர் மதச்சார்புள்ள பாதைக்கு அழைத் துச் சென்று வாழ்க்கையைக் கெடுத்து விடக் கூடாது. இது ஒரு தவறான முன்னுதாரணம்” என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசமாக வாதிட் டனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, அரசுப் பணியில் அந்த ஜோதிடர் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே முதலமைச்சர் விஜய் பின்வாங்கினார்.
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் நேற்று மதியம் (13.5.2026) வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், “ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை சிறப்புப் பணி அதிகாரியாக நியமித்து வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது” என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். தனது பதவி எதிர்கால்த்தையே கணிக்காதவர் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான முடிவெடுக்கும் முதலமைச்சரின் அன்றாட நடவடிக்கையை முடிவு செய்வாராம்.
என்ன கூத்து!
