‘நீட்’ தேர்வு குளறுபடி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த விடுதி உரிமையாளர் – நடந்தது என்ன?

ஜெய்ப்பூர், மே 14 ராஜஸ்தானில் மே மாதம் 2ஆம் தேதி நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து, ராஜஸ்தானை சேர்ந்த விடுதி உரிமையாளர் மற்றும் ஒரு மருத்துவரை விசாரணை வளையத்திற்குள் காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.

ராஜஸ்தனை சேர்ந்த மாணவர் ஒருவர் கேரளாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் முதலா மாண்டு மருத்துவப்படிப்பு பயின்று வருகிறார். இவரின் தந்தை ராஜஸ் தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.

மே மாதம் 2ஆம் தேதி இரவு 11மணியளவில் கேரளாவில் மருத்துவம் பயின்று வரும் மாணவருக்கு, சிகார் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் நீட் மாதிரி வினாத்தாளை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

இந்த மாதிரி வினாத்தாளை ராஜஸ்தானில் விடுதி நடத்திவரும் தனது தந்தைக்கு அனுப்பிய மாணவர், விடுதியில் தங்கி நீட் நுழைவு தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்களுக்கு கொடுக்கும்படி கூறியுள்ளார்.

இதனையடுத்து விடுதி உரிமை யாளர் தனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவருக்கு நீட் மாதிரி வினாத்தாளை மே 3ஆம் தேதி காலையில் அனுப்பி யுள்ளார்.

இதனை பரிசோதித்த ஆசிரியர்கள் அசல் வினாத்தாளோடு, மாதிரி வினாத்தாளில் கேட்கப்பட்ட 135 கேள்விகள் ஒரேமாதிரி இருந்ததை கண்டு அதிர்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து சிகார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜெய்ப்பூரை சேர்ந்த இரண்டு சகோதரர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மகாராட்டிராவில் ஆயுர்வேதம் படித்து வரும் சுபம் கயிர்னர் என்ற மாணவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *