மதுரை, மே 14- 11-05-2026 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக அன்னை நாகம்மையார் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் அ.முருகானந்தம் தலைமையேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் எடிசன் ராஜா மலர் தூவி நினைவேந்தலைத் தொடங்கி வைத்தார்கள். அவரை தொடர்ந்து நிகழ்விலே கலந்து கொண்ட தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் மாவட்ட செயலாளர் இராலீ. சுரேஷ், ,கழக மாவட்ட துணைத் தலைவர் நா.முருகேசன் மாவட்ட மகளிர் அணி தலைவர் நாகராணி இளமதி முருகேசன், சுசிலா பகுத் தறிவாளர்கள் அமைப்பாளர் பா சடகோபன், செல்லத்துரை, ஜெயிலர் கலையரசன், ரமேஷ் ஆட்டோ செல்வம் மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் தேவராஜபாண்டியன். போட்டோ ராதா தெய்வசிகாமணி .ஆகியோர் மலர் தூவினர். பகுத்தறிவாளர்களாக மாவட்ட தலைவர் ச.பால்ராஜ் உரை யாற்றினார் . பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம்,
அன்னை நாகம்மையார் உலகின் நாத்திக இதழின் முதல் பெண் ஆசிரியராக இருந்ததையும், வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் கொள்கைக்கு உர மூட்டும் விதமாக வாழ்ந்ததை தமிழர் தலைவர் ஆசிரியர் இன்று தமிழ்நாடெங்கும் அவரது நினைவு நாளைக் கொண்டாடச் செய்து எழுச்சியூட்டுவது சிறப்பு என எடுத்துரைத்தார்.
திராவிட கழக சொற்பொழி வாளர் அ வேங்கை மாறன் அன்னை நாகம்மையாரின் தொண்டறத்தை உழைப்பை போராட்டத்தை தனது நினைவேந்தல் உரையில் எடுத்துரைத்தார்கள்
ப.க அமைப்பாளர்பா.சடகோபன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னையை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
