கள்ளுக் கடை மறியல் போர்-வைக்கம் போராட்டத்தை வீரியம் பெறச் செய்த வீராங்கனை அன்னை நாகம்மையார் நினைவு நாள்!

வடகுத்து, மே 14- கடலூர் மாவட்ட கழக சார்பில் 11.5.2026 அன்று மாலை 6  மணி அளவில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள் தலைமையில் மாவட்ட கழக தலைவர் சொ. தண்டபாணி முன்னிலையில் அன்னை நாகம்மையார் நினைவு நாள் பரப்புரை கூட்டம் நடை பெற்றது. மகளிர் அணி செயலாளர் விஜயா வரவேற்புரை ஆற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அன்னை நாகம்மையார் படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து சிறப்பு செய்தார். தொண்டறத்தாய் அன்னை நாகம்மையார் தந்தை பெரியாருடன் காங்கிரஸில் இருந்த போது ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கள்ளுக் கடை மறியல் போராட்டம் வைக்கம் போராட்டம் போன்ற போராட்டங்களில் அய்யாவை தொடர்ந்து போராட் டத்தை முன்னெடுத்துச் சென்றவர். போராட்டம் வீரியம் பெறுவதற்கு பெண்கள் பலரையும் போராட் டத்தில் ஈடுபடுத்தி தொண்டாற்றிய வீராங்கனை ஆவார். அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட பெண்மணியும் ஆவார். தந்தை பெரியாரின் பொதுத் தொண்டுக்கு தோன்றா துணை நின்றவர். பெண் குலத்தின் பொன் விளக்கு அன்னை நாகம்மையார் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வில் கவிஞர் அறிவழகன் போஸ்கோ அசோக் வடலூர் நகர கழக அமைப்பாளர் முருகன் பாவேந்தர் விரும்பி அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தியாகராசன் கோபால் கருணாநிதி மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் விழுப்புரம் கழக மாவட்ட செயலாளர் அரங்க.பரணிதரன் ஒன்றிய கழக தலைவர் கனகராசு தமிழ் வேள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். கிளை கழக செயலாளர் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *