வல்லம்–-தஞ்சை, மே 14- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்). தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் 500 மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர் சக்திவேல் தலைமையுரையாற்றினார். அவர் தம் உரையில், “எங்களது ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்க மானது இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டும் பலர் குறைந்த பட்சம் பயிற்சி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுகின்றார்கள். ஆகையால் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு நாங்கள் இலவசமாக ஒட்டுநர் உரிமம் பெற்று தருகிறோம். ஆகையால் மாணவர்களாகிய நீங்களும் பயிற்சி ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற்று நீங்களும் பயனடைய நாங்கள் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்துகின்றோம்” என்றார்.
நிகழ்வுக்கு தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்க உதவி ஆளுநர்
எம்.சுப்ரமணியன், மாவட்ட தலைவர் ஏ.கே.ஜாஹிர் உசேன், கையொப்பம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் மற்றும் மண்டலம் செ.தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆளுநராக Rtn.Er.ஜெ.லியோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது, “மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலவச பயிற்சி ஒட்டுநர் உரிமம் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கமும் பெரியார் மணியம்மை பயிற்சி ஓட்டுநர் பள்ளியும் இணைந்து 100 மாணவர்களுக்கு பயிற்சி ஓட்டுநர் உரிமம் வழங்கப் பட்டுள்ளது. மேலும் இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) துணைத் தலைவர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் உரையாற்றினார்.
அவர் தமது உரையில், “சிறப்பு வாய்ந்த இந் நிகழ்விற்கு ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கத்தினை பாராட்டி மற்றும் மாணவர்களுக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்குவது பற்றி அதற்கான வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆய்வாளர் முன்னிலையில் பயிற்சி ஓட்டுநர் உரிமத்தை காண்பித்து தனக்கு நிரந்தர வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான வாகனத்தை அவரிடம் ஒட்டி காண்பித்த பின் ஆய்வாளர் தாங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் அல்லது தேர்ச்சி பெற்வில்லை என்று கூறி தேர்ச்சி பெறாதவர்களுக்கு இன்னும் சிறிது காலம் கழித்து ஓட்டுநர் பயிற்சி உரிமம் வாகனத்தை ஓட்டி காண்பித்த பின் வழங்கப்படும். போக்குவரத்து விதிகளின்படி வழங்கப் படுவார்கள்” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆளுநர் மற்றும் நியமனதாரர் Rtn.டி.என்.ஜெயக்குமார் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்க செயலாளர், Rtn.ஏ.ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.
