25 மரங்களின் ஆற்றல் ஒரே ‘இயந்திரத்தில்’; 1.5 டன் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் ‘ஆல்கா மரம்’

நகரங்களில் அடர்ந்த காடுகளை வளர்க்க இடம் இல்லாத நெருக்கடியான சூழலில், இது ஒரு சிறந்த தீர்வாகும். மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்தும் இந்தச் சாதனம், பெரும்பாலும் சூரிய ஆற்றல் (Solar Energy) மூலமே இயங்குகிறது.

எதிர்கால சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படங்களில் வருவது போன்ற ஒரு விசித்திரமான மரம் இப்போது இந்தியாவில் நிஜமாகியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிறுவப்பட்டுள்ள ‘ஆல்கா மரம்’ (Algae Tree), சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெயரில் ‘மரம்’ என்று இருந்தாலும், இது மண்ணில் வளரும் மரம் கிடையாது. இது செங்குத்தான உயிரி-பொறியியல் (Bio-engineering) கட்டமைப்பு ஆகும். பெட்டி போன்ற அமைப்பிற்குள் தண்ணீர், கோடிக்கணக்கான நுண்ணிய பாசிகள் (Microalgae) நிரப்பப்பட்டிருக்கும். இது நகரத்தின் அசுத்தமான காற்றை உள்வாங்கி, சுத்தமான ஆக்ஸிஜனாக மாற்றும் ‘லிவிங் ஏர் ப்யூரிஃபையர்’ (Living Air Purifier) ஆகும். இந்த ஆல்கா மரம் செயல்படும் விதம் மிகவும் சுவாரசியமானது. நகரத்தின் வாகனப் புகை மற்றும் தூசு நிறைந்த காற்றை இது தனக்குள் இழுக்கிறது. உள்ளே இருக்கும் பாசிகள், ஒளிச்சேர்க்கை மூலம் காற்றில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட கார்பன்-டை-ஆக்சைடை உணவாக உட்கொள்கின்றன.

பதிலுக்கு, மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான உயிர்வளியான ஆக்ஸிஜனை (O2) வாரி வழங்குகின்றன. காற்றில் மிதக்கும் நுண்துகள்களை (PM2.5) இது வடிகட்டி சுத்தப்படுத்துகிறது. இந்த ஒரு சிறிய கட்டமைப்பின் சக்தி பிரமிக்க வைக்கிறது. ஒரு ஆண்டில் சுமார் 1.5 டன் கார்பன்-டை-ஆக்சைடை இது உறிஞ்சும் திறன் கொண்டது. அதாவது, 20 முதல் 25 நன்கு வளர்ந்த பெரிய மரங்கள் எந்த அளவு காற்றைச் சுத்தப்படுத்துமோ, அந்த வேலையை இந்த ஒரே ஒரு ஆல்கா மரம் செய்து முடிக்கும்.

நகரங்களில் அடர்ந்த காடுகளை வளர்க்க இடம் இல்லாத நெருக்கடியான சூழலில், இது சிறந்த தீர்வாகும். மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்தும் இந்தச் சாதனம், பெரும்பாலும் சூரிய ஆற்றல் (Solar Energy) மூலமே இயங்குகிறது. இந்த ஆல்கா மரம் ஒரு அற்புதம் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், இது இயற்கை மரங்களுக்கு ‘கூடுதல் உதவி’ மட்டுமே தவிர, அவற்றிற்கு முழுமையான மாற்றாக முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனெனில், ஒரு இயற்கை மரம் தரும் பல்லுயிர் சூழலை (Biodiversity) எந்த இயந்திரத்தாலும் வழங்க முடியாது. இருப்பினும், போபால் போன்ற நெரிசலான நகரங்களில் மாசுபாட்டைக் குறைக்க இந்த ‘ஆல்கா மரம்’ ஒரு வரப்பிரசாதமே.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *