தமிழ்நாட்டிலேயே வாக்குப்பதிவில் கடைசி இடத்தில் பாளையங்கோட்டை!

1 Min Read

நெல்லை, ஏப். 26- “தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு” என்று போற்றப்படும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டிலேயே மிகக்குறைந்த வாக்குப்பதிவை பதிவு செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி மற்றும் பெருமைகள்

பாளையங்கோட்டை தொகுதி நூற்றாண்டு பழமையான கல்வி நிறுவனங்களைக் கொண்டது. இங்கிருந்து உருவான ஆளுமைகள் அரசியல், நீதித்துறை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்துள்ளனர்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்) மற்றும் திருநாவுக்கரசர் (முன்னாள் காங்கிரஸ் தலைவர்) போன்ற தலைவர்கள் பயின்ற தூய சவேரியார் கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது.அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய முக்கிய மய்யங்கள் இத்தொகுதியிலேயே உள்ளன.

வாக்குப்பதிவு நிலவரம்

தமிழ்நாட்டின் 234 தொகுதி களுக்கும் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாளையங்கோட்டை: 68.97 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி, தமிழ்நாட்டிலேயே கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

வீரபாண்டி: 93.40 சதவீத வாக்குகள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. வாக்குப் பதிவு நிறைவடைய வேண்டிய மாலை 6 மணிக்கு வரிசையில் நின்றிருந்த 1,174 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்ட போதிலும், இந்தத் தொகுதியால் 70 சதவீதத்தைக் கூட எட்ட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகத்தின் முயற்சிகள் வீண்?

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார்:

மினி மாரத்தான் ஓட்டம், மகளிருக்கான கோலப் போட்டிகள், மனித சங்கிலி மற்றும் கலை நிகழ்ச்சிகள். ஆட்சியர் அலுவலகமே பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கொக்கிரகுளத்தில் அமைந்திருந்தும், படித்தவர்கள் நிறைந்த இப்பகுதியில் வாக்கு சதவீதம் சரிந்தது மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்அய்ஆர்) பின் நடந்த முதல் தேர்தல் என்பதால், பல தொகுதிகளில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தைத் தாண்டிய நிலையில், பாளையங்கோட்டையின் இந்த நிலை விவாதப் பொருளாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *