வேலையின்மை விகிதம் 4 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 15% ஆக உயர்வு

புதுடில்லி, மே 13 ஒன்றிய புள்ளி விவரம், திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைக் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு ஆய்வில், கடந்த 4 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகி தம் 15% ஆக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

“ஜனவரி – மார்ச் காலாண்டில் 15-29 வயதுக்குட்பட்ட இளை ஞர்களிடையே வேலையின்மை விகிதம் 15% ஆக உயர்ந்துள்ளது.

இது அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 14.3% ஆக இருந்தது.

இளம் பெண்களிடையே வேலை யின்மை முந்தைய காலாண்டில் 16.6% ஆக இருந்த நிலையில், தற்போது 17.7% ஆக அதிகரித்துள்ளது.

அதே போல் 30 முதல் 40 வயது வரை இந்த விகிதம் 13.5% இல் இருந்து 14% ஆக உயர்ந்துள்ளது

வாராந்திர நிலை முறை என்பது ஒரு நபர் குறிப்பிட்ட வாரத்தில் ஒரு மணிநேரம் கூட வேலை செய்யாமல், ஆனால் அந்த காலகட்டத்தில் குறைந்தது ஒரு மணிநேரமாவது வேலை தேடிக்கொண்டிருந்தாலோ அல்லது வேலைக்குத் தயாராக இருந்தாலோ அவர் வேலையில்லாதவராகக் கருதப்படுவார்.

அதன்படி தற்போதைய வாராந்திர நிலை முறையின் கீழ், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான ஒட்டு மொத்த வேலையின்மை விகிதமும் அதிகரித்துள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 4.8% ஆக இருந்த இந்த விகிதம், ஜனவரி-மார்ச் காலாண்டில் 5% ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புற வேலை யின்மை 6.7% இல் இருந்து 6.6% ஆகக் குறைந்தது. கிராமப்புற வேலையின்மை 4% இல் இருந்து 4.3% ஆக அதிகரித்தது.

தேசிய அளவில் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR) ஜனவரி-மார்ச் காலாண்டில் 55.5% ஆக இருந்தது (முந்தைய காலாண்டில் 55.8%). பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 34.9% இல் இருந்து 34.7% ஆகக் குறைந்துள்ளது. தொழிலாளர் மக்கள் தொகை விகிதமும் (WPR) 53.1% இல் இருந்து 52.8% ஆகச் சரிந்துள்ளது. துறை வாரியான மாற்றங்கள் கிராமப்புறங்களில், வழக்கமான ஊதியம், ஊதியம் பெறும் தொழிலாளர்களின் பங்கு 14.8% இல் இருந்து 15.5% ஆக அதிக ரித்துள்ளது.

சுயதொழில் செய்ப வர்களின் விகிதம் 63.2% இல் இருந்து 62.5% ஆகக் குறைந்தது. கிராமப்புற இந்தியாவில் விவசாயத் துறையில் ஈடுபடும் தொழிலாளர்களின் பங்கு 58.5% இல் இருந்து 55.8% ஆகக் குறைந்துள்ளது.

சேவைத் துறையில் வேலை வாய்ப்பு 20.6% இல் இருந்து 21.7% ஆகவும், உற்பத்தித் துறையில் 20.9% இல் இருந்து 22.6% ஆகவும் உயர்ந்துள்ளது” என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *