சென்னை, மே 13- தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தர வேண்டிய ரூ.317 கோடி நிலுவையை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுத்தர விவசாயிகள், முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு தொடர்பாக ரூ.317 கோடி நிலுவைத் தொகை இருப்பதாகவும், அதனை ஒன்றிய அரசிடம் பேசி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிலுவைத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத் தர தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.317 கோடி நிலுவையைப் பெற்றுத் தர நடவடிக்கை! விவசாயிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!
Leave a Comment
