பொதுத்துறை வங்கியில் வேலை; 1865 பணியிடங்கள்

1 Min Read

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு; 1865 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை இதுதான்.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1865 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 95 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.05.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தொழிற்பழகுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1865

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றிய அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊக்கத்தொகை: ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங் களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பொது அறிவு அல்லது வங்கி சார்ந்த கேள்விகள், கணிதம் மற்றும் திறனறி, ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர கால அளவில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2026

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.800. எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.600, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 400.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *