சென்னை, மே 13 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மகாராட்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஷுபம் கைர்னர் என்ற இளைஞரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் வழங்கிய ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே, (உத்தேச வினாத்தாள்) என்ற பெயரில் சமூக வலைதளங்கள் மற்றும் இதர வழிகளில் வினாத்தாளை கசியவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் மற்றும் இதர மாநிலத் தொடர்புகள் குறித்தும் சிபிஅய் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
