கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மத்தியப்பிரதேசம் முதலிடம்!

போபால், மே 12- பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே மிக மோசமான மாநிலமாக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகளின்படி, கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்

2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 10 கர்ப்பிணிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மகாராட்டிராவில் 6 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேரும், குஜராத் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 2 பேரும் இத்தகைய கொடூரமான குற்றங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

பாதுகாப்பில் அலட்சியம்

குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்களில் 4 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்களாகும். பிரதமர் மோடி மேடைதோறும் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசினாலும், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்பதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் தேர்தல் முழக்கங்களாக மட்டுமே உள்ளதே தவிர, நடைமுறையில் பாஜக மாநிலங்களில் அதற்கான அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *