நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்

லூசியானா, மே 12- அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இதில் 15 சதவீத தொகை நிறுவனத்தில் பணியாற்றும் 540 ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என ஃபைபர் பாண்ட் நிறுவன உரிமையாளர் கிரகாம் வாக்கர் நிபந்தனை விதித்தார். இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். அதுவரை அவர்கள் பணியில் தொடர வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஆனால், 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் முழுத் தொகையாக ரூ.3.7 கோடி பெற்றனர்.

தாய்லாந்து முன்னாள் பிரதமர்
தக்ஷின் சினவத்ரா விடுதலை

பாங்காக், மே 12- தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ரா(76) நேற்று (11.5.2026) பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து பிரதமராக கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தக்ஷின் சினவத்ரா பதவி வகித்து வந்தார்.

இவரது ஆட்சி மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. இதனால், வௌிநாடுகளில் இருந்தவாறே, தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதைத்தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு தாய்லாந்து திரும்பிய தக்ஷின் சினவத்ரா, உச்ச நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், முந்தைய ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வயது மூப்பு, உடல்நிலை மற்றும் சிறையில் நன்னடத்தை ஆகிய காரணங்களால் தக்ஷின் சினவத்ரா நேற்று (11.5.2026) விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *