திருச்சியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்புக் கூட்டம்

திருச்சி, மே 10- திருச்சி மாவட்ட, மாநகர பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் மே 7 ஆம் தேதி மாலை புத்தூர் பி.கே. ஓட்டல், கோகுலம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ப.க. தலைவர் பா.லெ.மதிவாணன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட ப.க செயலாளர் பி.மலர்மன்னன் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்,  மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல்,  தகவல்தொழில்நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொறியாளர் தி.த. சண்முக வடிவேல் புரட்சிக்கவிஞர் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்.

முன்னதாக பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தொடக்கவுரையாற்றினார்.

தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர் சு.செயலாபதி சிறப்புரையாற்றினார்.

இதில் ப.க. இரா.மணியன், மு.குத்புதீன்,பி. ஜீவஜோதி, பொ.இராஜாராம், தஞ்சை ப.க. குணசேகரன், திராவிட மாணவர் கழக துணை செயலாளர் ஆ.அறிவுச்சுடர், பொன்.யோகராஜ், விடுதலை செல்வம், அ.ஜெயராஜ், ஜெயில்பேட்டை குணா, சு.ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் ம.சங்கிலிமுத்து, சி.கனகராசு, பெ.நாகலிங்கம், பிரபு, திருவரங்கம் திருநாவுக்கரசு, அ.கலைமாறன், மாநகர கழக தலைவர் ராமதாஸ், லால்குடி மாவட்ட தலைவர் வீ.அன்புராஜா, கே.அருள், புரட்சிக்கவிஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் பாவலர் குறள்மொழி, குழந்தை ஈகவரசன், தோழர் கோவன், வா.பன்னீர்செல்வம், சி.கேசவன், சே.வசந்தி, தமிழ்மலர், தினேஷ், ரா.பேபி, உலகநாதன், பெ.ராஜேந்திரன், லெ.திருச்சி செழியன், பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள் சகிலா பானு, விஜயலட்சுமி, மற்றும் திருக்குறள் பேரவை தமிழ் ஆர் வலர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக மாநகர ப.க. செயலாளர் ஜோ.பென்னி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *