இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண நேபாளம் விருப்பம்!

1 Min Read

புதுடில்லி, மே 9- இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்சினையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திபெத் தன்னாட்சி பகுதியில் கைலாச மலைக்கும், மானசரோவா் ஏரிக்கும் இந்துக்கள், சமணா்கள் மற்றும் பவுத்தா்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம்.

நிகழாண்டு அந்த பயணம் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய், சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் ஆகிய 2 வழிகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெற உள்ளது.

கைலாஷ் மானசரோவா் பயணத்தை லிபுலேக் கணவாய் வழியாக மேற்கொள்ள இந்தியாவும், சீனாவும் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்தது. லிபுலேக் கணவாய் நேபாளத்துக்குச் சொந்தம் என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு ஒன்றிய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து நேபாள வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லோக் பகதூா் சேத்ரி 8.5.2026 அன்று தெரிவித்ததாவது:

கடந்த 1816-ஆம் ஆண்டின் சுகவுலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகாகாளி ஆற்றின் கிழக்கே உள்ள லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி பகுதிகள் நேபாளத்துக்குச் சொந்தமானவை. இதுகுறித்த நேபாள அரசின் நிலைப்பாட்டை இந்தியா மற்றும் சீனாவிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.

நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்சினையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புகிறது என்று தெரிவித்தாா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *