10 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏஅய் எழுத்தறிவுத் திட்டம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, மே 9- பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏஅய் எழுத்தறிவு திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ”ஆசிரியர்களுக்கான ஏஅய் எழுத்தறிவு திட்டம் எனப்படும் இந்த முன்னெடுப்பு இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் உருவாக்கப்பட்ட கல்விக்கான ஏஅய் சிறப்பு மய்யமான போதன் ஏஅய் அமைப்பால் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைப்பதையும், கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு, பாடம் திட்டமிடல், உள்ளடக்க உருவாக்கம், மதிப்பீடுகள் மற்றும் மாணவர் கருத்து பரிமாற்ற அமைப்புகள் உள்ளிட்ட வழக்கமான கற்பித்தல் நடைமுறைகளில் ஏஅய்-யை ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

2027ஆம் ஆண்டிற்குள் அன்றாட வகுப்பறை கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *