கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் அன்னையாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் நடக்கட்டும்!

1 Min Read

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, அவர் நடத்திய தீண்டாமை ஓழிப்புப் போராட்டங்களிலும், கள்ளுக்கடை மறியலிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் முன்னின்று போராடியவர்; பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட போது, வைக்கம் போராட்டத்தை நடத்திய பெருமைக்குரியவர். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் திகழ்ந்தவர் ஆவார்.

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி பரப்புரை மேற்கொண்டபோது, அவருக்குத் தோன்றாத் துணையாக உடனிருந்து பணியாற்றிவர் அன்னை நாகம்மையார். ‘குடிஅரசு’ ஏட்டின் வெளியீட்டாளராகத் திகழ்ந்தவர். சுயமரியாதைத் திருமணங்கள், ஜாதிமறுப்பு, விதவைத் திருமணங்களை நடத்தி வைத்தவர். அம் மணமக்களைப் பாதுகாத்து வழிநடத்தியவர் என்ற வரலாற்றுப் பெருமைக்குரியவர்.

அவரது நினைவுநாளான மே 11 அன்று சென்னை பெரியார் திடலில் அவரது உருவப் படத்திற்கு எமது தலைமையில், மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டுகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும், கிளைக் கழகங்களிலும் உள்ள முக்கிய மக்கள் கூடும் இடங்களிலும் அன்னை நாகம்மையார் படத்தை வைத்து, அவரது நினைவு நாள் நிகழ்ச்சிகளைத் தோழர்கள் ஒருங்கிணைத்து நடத்த வேண்டுகிறோம். அதற்குரிய ஏற்பாடுகளை மாநில, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் உடனடியாக மேற்கொள்வார்கள்.

சுயமரியாதைச் சுடரொளி அன்னை நாகம்மையார் வாழ்க!

அவர்தம் சுயமரியாதைக் கொள்கைகள் ஓங்குக!

(கி.வீரமணி)

தலைவர்,
திராவிடர் கழகம்

 

9.5.2026        

சென்னை 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *