தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தகவல்!
புதுடில்லி, மே 8 – 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு களில் பெரு நகரங்கள் வரிசையில் தலைநகர் டில்லி முதல் இடத்தில் உள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 75 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 13 ஆயி ரத்து 400 வழக்குகள் பெண்கள் தொடர்பான குற்ற வழக்குகள் என்று அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் மும்பை இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் கடந்த 2024 ஆம் ஆண்டில் 98 ஆயிரத்து 375 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இது முந்தைய ஆண்டைவிட 8 சதவீதம் அதிகம் என்றும் தேசிய குற்ற ஆவண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது., குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் ஒரு லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், சைபர் குற்றங்கள் 18 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து ஆயிரத்து 928 வழக்குகள் பதி வாகி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றங்கள் 4.6% அதிக ரித்துள்ளதாகவும், 2 லட்சத்து 14 ஆயிரம் பொருளாதார குற்ற வழக்குகள் பதிவாகியுள்ள தாகவும், தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
