சென்னை, மே 8 சென்னையில் பெருகி வரும் மின்சார வாகனங்களின் (இவி) பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் முதற்கட்டமாக 21 முக்கிய புறநகர் ரயில் நிலையங்களில் மின் வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் மய்யங்கள் (Battery Swapping Stations) அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள், தங்களது சார்ஜ் தீர்ந்த பேட்டரிகளைக் கொடுத்துவிட்டு, உடனடியாக சார்ஜ் செய்யப்பட்ட புதிய பேட்டரிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கிய ரயில் நிலையங்களின் பட்டியல் பின்வருமாறு:
மத்திய சென்னை பகுதி: சென்னை சென்ட்ரல், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி.
தெற்கு சென்னை & எம்ஆர்டிஎஸ்: கோட்டூர்புரம், முண்டகக்கண்ணி அம்மன் கோயில், திருமயிலை, மந்தைவெளி, திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி.
புறநகர் பகுதிகள்: சைதாப்பேட்டை, பரங்கிமலை, பல்லாவரம், கோடம்பாக்கம்.
வடக்கு & மேற்கு சென்னை: வண்ணாரப்பேட்டை, கொரட்டூர், வில்லிவாக்கம், அண்ணனூர், பசுமை வழிச்சாலை.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனப் பயன்பாடு அதிகரிக்கும்.
ரயில் நிலையங்களிலேயே இந்த வசதி இருப்பதால், அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த முன்னெடுப்பு சென்னையின் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில்
வெப்பத்தை தணித்த கோடை மழை
13ஆம் தேதி வரை
கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, மே 8 தமிழ்நாட்டில் பெய்து வரும் கோடை மழை வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த மழை வருகிற 13ஆம் தேதி வரை தொடரும் என வானிலை மய்யம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலைமய்யம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தெற்கு கேரள கடலோரம் முதல் மத்திய பிரதேசம் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும்.
வானிலை மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மழைப்பொழிவு பின்வருமாறு எதிர்பார்க்கப்படுகிறது:
மே 8 முதல் மே 10 வரை: நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 11 அன்று: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னையின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மழைப்பொழிவு காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 11-ஆம் தேதி வரை வெப்பநிலையானது படிப்படியாகக் குறையக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உன்னால் முடியும் தம்பி!
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ஏழு வயது சிறுவன் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடைப்பட்ட பாக் நீரிணையை நீந்தி கடந்து உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளான்.
