ஏழுமலையானுக்கே பட்டை நாமம்! திருமலை கலப்பட நெய் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்மட்டக் குழு அமைத்த ஆந்திர அரசு ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

2 Min Read

திருப்பதி, மே.8- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கலப்பட நெய் விவகாரத்தில் ஒரு நபர் குழுவின் பரிந்துரை கள் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.

கலப்பட விவகாரம்

ஆந்திராவில் ஓய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தது. கலப்பட நெய் விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வு அதிகாரி கள் குழு விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த நிலையில் கலப்பட நெய் விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிதினேஷ்கு மார் தலைமையிலான ஒரு நபர் குழுவை நியமித்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட் டது. அந்த ஒருநபர் குழுவிசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

ஒரு நபர் குழு பரிந்துரைகள்

அதில், திருப்பதி ஏழுமலையானுக்கு பயன்படுத்தப்பட்ட நெய் மாதிரிகள் தரநிலைக்கு ஏற்ப இல்லாததையும், ஆய்வக பரிசோதனைகளில் நெய்யில் கலப்படம் செய்திருந்ததையும் கண்டறிந்தது. நெய்கொள்முதல் மற்றும் வினியோக முறைகளில் பல குறைபாடுகள் இருப்பதாக ஒரு நபர் குழு சுட்டிக்காட்டியது. இந்த பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தவேண்டும் என்றும் ஒருநபர் குழு பரிந்துரைத்துள்ளது.

உயர்மட்டக் குழு அமைப்பு

இந்த நிலையில் நேற்று (7.5.2026) ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜி.சாய்பிரசாத் வெளியிட்டுள்ள அரசாணையில் ஒரு நபர் குழுவின் அறிக் கையை ஆய்வு செய்த அரசு, அதன் பரிந்துரைகளை அமல்படுத்தவும் உரிய நடவ டிக்கைகளை எடுக்கவும் ஒரு முறையான கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் எனக் கருதுகிறது.

அதன்படி, அரசு ஒரு உயர் மட்டக் குழுவை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச்செயலாளர் தலைமையிலான இந்த புதிய குழுவில், தலைமை இயக்குநரை (டிஜிபி) உறுப்பினராகவும், சட்ட செயலாளர் உறுப்பினர் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள். ஒருந பர் குழுவின் கண்டறிதல்களை ஆய்வு செய்து, குறிப்பிட்ட நிர்வாக ரீதியான. ஒழுங்குமுறை மற்றும் சட்ட சரீதியான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதோடு. அவற்றை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவுடன் கூடிய முன்னுரிமைத் திட்டத் தையும் முன்மொழிய இக்குழு பணிக்கப்பட்டுள்ளது. அதே போல்,  அரசின் முடிவுகளை செயல்படுத்துவதற்கான கண்காணிப்பு முறையை பரிந்துரைத்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *