கரும்பு குவிண்டாலுக்கு ரூ.365ஆக அதிகரிப்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38ஆக உயர்த்த முடிவு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

2 Min Read

புதுடில்லி, மே 6  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (5.5.2026) ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

நீதித்துறை, விவசாயம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
எண்ணிக்கை 38-ஆக உயர்வு

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, நீதிபதிகளின் எண்ணிக்கையை (தலைமை நீதிபதி உட்பட) தற்போதுள்ள 34-லிருந்து 38-ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2019-ம் ஆண்டுக்குப்பிறகு தற்போது மீண்டும் எண்ணிக்கை உயர்த்தப் படுவது குறிப்பிடத்தக்கது.

கரும்பு விவசாயிகளுக்கு இனிப்புச் செய்தி

2026-2027 கரும்புப் பருவத்திற் கான குறைந்தபட்ச விலையை (FRP) குவிண்டாலுக்கு ரூ.10 உயர்த்தி, ரூ.365 ஆக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இது வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி

ரயில்வே திட்டங்கள்: ரூ.23,437 கோடி மதிப்பிலான 3 புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாக்தா-மதுரா, குண்டக்கல்-வாடி உள்ளிட்ட வழித்தடங்களில் சுமார் 901 கி.மீ. தூரத்திற்கு கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்படும். இது வழிபாட்டு இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்.

செமி கண்டக்டர் ஆலைகள்: குஜராத்தில் ரூ.3,936 கோடி முதலீட்டில் இரண்டு புதிய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் 2,230 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கப்பல் பழுதுபார்க்கும் மய்யம்: குஜராத்தின் வடினாரில் ரூ.1,570 கோடி செலவில் அதிநவீன கப்பல் பழுதுபார்க்கும் மய்யம் அமைக்கப்பட உள்ளது.

விவசாயம் மற்றும் சிறு தொழில் களுக்கான ஊக்கம் பருத்தி சாகுபடி: பருத்தி விளைச்சலை அதிகரிக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.5,659.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

MSME கடன் உதவி: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்களின் மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.18,100 கோடி ஒதுக் கீட்டில் அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *