புதுடில்லி, மே 06 பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியி லிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த 6 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களை (எம்பிக்கள்) உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
6 எம்.பி.க்கள் விலகல்
கடந்த மாதம் 24-ஆம் தேதி, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 பேர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இவர்களில் 6 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று (5.5.2026) குடியரசுத் தலைவரைச் சந்தித்த முதலமைச்சர் பகவந்த் மான், கட்சி மாறியவர்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் அவர் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார். இதற்கிடையில், ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்பி ராகவ் சதா, பஞ்சாப் அரசு தங்களைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி யுள்ளார்.
அரசு இயந்திரம் அத்துமீறல்: “ஆம் ஆத்மி அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கட்சி மாறியவர்களைக் குறிவைத்து துன் புறுத்துகிறது,” என்று ராகவ் சதா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் முறையீடு: ராகவ் சதா மற்றும் அவருடன் மூன்று பேர் குடி யரசுத் தலைவரைச் சந்தித்து, தங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் குறித்து மனு அளித் தனர். இந்த விவகாரம் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
