தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பா.ஜ.க. படுதோல்வி – முக்கிய தலைவர்கள் மண்ணைக் கவ்வினர்!

2 Min Read

மோடியின் ‘ரோடு ஷோ’
பிரசாரம் எடுபடவில்லை…

சென்னை, மே 5- தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. போட்டியிட்ட 27 தொகுதிகளில் வெறும் ஒரு இடத்தில் மட்டுமே அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை அந்த எண்ணிக்கையை கூட தக்கவைக்க முடியாமல் பா.ஜ.க. பின்னடைவைச் சந்தித்துள்ளது.

படுதோல்வி

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே பா.ஜ.க. வேட்பாளர்கள் பல தொகுதிகளில் பின்தங்கியே காணப்பட்டனர். குறிப்பாக அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களாகக் கருதப்பட்ட பலரும் தோல்வியைத் தழுவினர்:

நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், பா.ஜ.க.வின் பலமான கோட்டையாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும் அக்கட்சிக்கு வெற்றியும் முன்பு கிடைத்த வாக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எடுபடாத மோடியின் ‘ரோடு ஷோ’ பிரசாரம்

இந்த தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தமிழ்நாடு வருகை தந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சென்னை உள்ளிட்ட நகரங்களில் அவர் நடத்திய ‘ரோடு ஷோ’ மற்றும் பொதுக்கூட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பியூஷ் கோயல் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் தமிழ்நாட்டில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர். பிரதமர் மோடியின் தீவிர பிரசாரம் மற்றும் ஒன்றிய அமைச்சர்களின் வருகை என அனைத்தும் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் தாமரை மலர மக்கள் இன்னும் இடமளிக்கவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

 

தமிழ்நாட்டில் 74 ஆண்டுகளுக்குப் பிறகு தொங்கு சட்டமன்றம்!

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைகிறது

சென்னை, மே 5- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலத்தில் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் 1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 74 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு தொங்கு சட்டமன்றம் (Hung Assembly) அமையும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால், தற்போதைய நிலவரப்படி எந்த ஒரு கட்சியும் அந்த இலக்கை எட்டவில்லை.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக): 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதர கட்சிகள் / கூட்டணிகள்: 126 இடங்கள் பெற்றுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது.

நீடிக்கும் அரசியல் பரபரப்பு

1952இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ராஜாஜி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதே போன்றதொரு சூழல் தற்போது 2026இல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

தவெக ஆட்சி அமைக்க வேண்டுமெனில், இதரகட்சியினரின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா அல்லது கூட்டணிக் கட்சிகளின் பலத்தை எதிர்பார்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு தெளிவான பெரும்பான்மையை வழங்காத நிலையில், அடுத்த சில நாள்கள் தமிழ்நாடு  அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.”

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *