ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.65.16 கோடி அபராதம்! ரயில்வே அதிகாரிகள் தகவல்

1 Min Read

சென்னை, மே 5- கடந்த நிதியாண்டில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம், முறையற்ற பயணம் உள்ளிட்ட பிரிவுகளில் 12.24 லட்சம் வழக்குகள் பதிந்து, ரூ.65.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-2026), ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பயணச் சீட்டு இல்லாமல் பயணம், முறையற்ற பயணம் மேற்கொண்டது தொடர்பாக, 12.24 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.65.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் நிலைய வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்னரே முறையான பயணச் சீட்டுகளைப் பெற்று, அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகின்றனர்.

பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கு வதற்கு முன் பயணச் சீட்டுகளை சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *