புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ரங்கசாமி மீண்டும் தேர்வு

1 Min Read

புதுவை, மே 5 புதுச்சேரியில் நடந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ரங்கசாமியை மீண்டும் தேர்வு செய்தனர். அமைச்சர்கள் யார், யார் என விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கிறது. இத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுகளில் வென்றுள்ளது. அதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற வேட்பாளர் அனைவரும் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவனருமான ரங்கசாமியை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றனர்.தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நேற்று (4.5.2026) நள்ளிரவில் காமராஜர் சாலையில் உள்ள விடுதியில்  என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் ரங்கசாமியை என்ஆர்காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்.

இதற்கான கடிதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். என்டிஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமிதான் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், புதுச்சேரியில் யார் யாருக்கு அமைச்சர் பதவிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் என்பதை முதலமைச்சர் ரங்கசாமி முடிவு எடுக்கவுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, விரைவில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை சந்திக்கவுள்ளதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *