சிங்கப்பூரில் களைகட்டிய தமிழ்மொழி விழாக்கள்

3 Min Read

ிங்கப்பூரின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை, அதன் கலாச்சாரச் செழுமை மாறாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் உன்னத நோக்கில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.

2007ஆம் ஆண்டு தமிழ் மொழி கவுன்சிலால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று ஒரு மாபெரும் சமூக இயக்கமாக உருவெடுத்துள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகப்படுத்துவது, அன்றாட வாழ்வில் தமிழைப் பேசுவதைப் பெருமிதமாக மாற்றுவது மற்றும் பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரின் பன்மயச் சூழலில் தமிழ் அடையாளத்தை நிலைநிறுத்துவது ஆகியவையே இவ்விழாவின் முதன்மை நோக்கங்களாகும். கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக அரசு அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்களின் ஒருங்கிணைந்த உழைப்பால், இந்த விழா சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஓர் அங் கமாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முழுவதும் அரங்கேறிய ‘தமிழ் மொழி விழா 2026, வழக் கம் போல கலை மற்றும் இலக்கியச் செழு மையுடன் மிளிர்ந்தது. ஏப்ரல் 5ஆம் தேதி   மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற எழுச்சியான தொடக்க விழாவுடன் இந்த ஒரு மாத காலக் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர் வமாகத் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நமது டாம்பிளிஸ் ஹப்பில் அமைக்கப்பட்ட ‘ஊர்த் திருவிழா’ பொதுமக்களைப் பெருமள வில் ஈர்த்தது. அங்கு தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டுகள் மற்றும் கலைகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, நவீனச் சூழலில் தமிழ்ப் பண்பாடு புதிய பரிமாணத்துடன் வெளிப்பட்டது.

மாணவர்களின் மொழித்திறனை மேம் படுத்தும் நோக்கில், கல்வி அமைப்பின் ஏற்பாட்டில் ஏப்ரல் 8 முதல் 18 வரை பல் வேறு இலக்கிய மற்றும் பேச்சுப் போட்டிகள் சிறப்புற நடைபெற்றன.

அதேபோல், தேசிய நூலக வாரியம் சார்பில் ஏப்ரல் மாதத்தின் பல்வேறு தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதை சொல்லல் மற்றும் வாசிப்பு அமர்வுகள் சிறுவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடகத் துறையைப் பொறுத்தவரை, மீடியா கார்ப் நிறுவனம் ஏப்ரல் 14ஆம் தேதி நடத்திய நேரலை சிறப்பு நிகழ்ச்சி, தமிழ் உணர்வை ஒவ்வொரு இல்லத்துக்கும் கொண்டு சேர்த்தது. மேலும், ஏப்ரல் 19ஆம் தேதி
‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகத்தில் நடை பெற்ற கவிஞர்கள் சந்திப்பு மற்றும் இலக்கிய உரையாடல்கள், தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும் அழகையும் அறிவார்ந்த முறையில் விவாதித்தன.

இவ்வாண்டு விழாவின் மிக முக்கியமான மற்றும் விரிவான அங்கமாக புங்கோல் மேற்கு சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் அமைந் தன, ‘தேன் தமிழ் கொண்டாட்டம்’ என்ற பெயரில் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அந்த வட்டாரத்தில் வாழும் தமிழ் குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு திருவிழாவாகவே மாறியது. இதில் மாணவர் கள் தங்களின் பேச்சாற்றல் மற்றும் கட்டுரைத் திறனை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் கலாச்சார மாறுவேடப் போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, மறக்கப்பட்டு வரும் கலைகளான வில்லுப்பாட்டு மற்றும் கர்லாக்கட்டை சுழற்றுவது போன்ற வீரக் கலைகள் அங்கு நிகழ்த்திக் காட்டப்பட்டது. அத்தனையும் வியப்பில் ஆழ்த்தியது. அரசு மற்றும் சமூகத் தலைவர்கள் முன்னிலையில் நடை பெற்ற இந்த விழாவில், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இளைஞர்கள் சமூக ஊடகங்கள் வழியாகத் தமிழை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் என்பது வெறும் மொழியல்ல, அது ஒரு வாழ்வியல் முறை என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கும் வகையில் நடை பெற்ற இந்த ஒரு மாத கால நிகழ்வுகள், சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்துள்ளன.

– த. தமிழ்மதி, சிங்கப்பூர் 

(நன்றி: ‘இந்து தமிழ்திசை’ 3.5.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *