நீரை.மகேந்திரன்

நொடிக்கு நொடி மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில், அதைச் சரியாகக் கையாள வேண்டும் எனில், அடுத்தடுத்த தலைமுறையினர் தங்களை அதற்குத் தயாராக்கிக்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப மாற்றங்களைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல; அரசியல் மாற்றங்களுக்கும் அதுதான் அடிப்படையானது என்பதை கடந்த தேர்தலில் கண்கூடாகப் பார்த்தோம்.
அந்த வகையில், ஊடகத் துறையில் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும் இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் தரமான கல்வியை வழங்க வேண்டியும், தமிழ்நாடு அரசு உருவாக்கிய நிறுவனம்தான், ‘சென்னை இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம்’ (Institute of Journalism and Media Studies)
2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மானியக் கோரிக்கையின்போது. இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டுக்கு ஒரு முதன்மையான கல்வி நிறுவனத்தை, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்க உள்ளதாக அறிவித்தார் – தி.மு.க. தலைவர் அன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
அந்த வகையில், 2025–2026 கல்வி ஆண்டிலேயே இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் (institute of Journalism and Media studies) தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தக் கல்வி நிறுவனம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
இந்தக் கல்வி நிறுவனம் தொடங்குவதற்காக 7.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக இதற்கென வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பாடத் திட்டங்களை உருவாக்கியதுடன், சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் இடம் தேர்வு செய்யவும் துணை நின்றது.
சேர்க்கை விவரம்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிசி/பிசி (முஸ்லீம்) எம்பிசி/டிஎன்சி/எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி ஆகியவர்களுக்குப் பட்டப் படிப்பில் தேர்ச்சி போதுமானது.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் ஆண்டிம் ஜூலை 1-ஆம் தேதியன்று 41 வயதைக் கடந்திருக்கக்கூடாது. கல்விக் கட்டணம் முதல் அரையாண்டிற்கு ரூ.5,000 மற்றும் இரண்டாவது கல்வியாண்டிற்கு ரூ.5,000.
நெறி சார்ந்த உயர்ந்த தரம், துல்லியம், நேர்மை, பொறுப்புடைமை ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் இதழாளர்களை உருவாக்குவது என்பதுதான் இந்த இதழியல் கல்வி நிறுவனத்தின் நோக்கம்.

சன் நியூஸ்’ தலைமை ஆசிரியர் மு.குணசேகரன் அவர்கள். தனக்கு ராம்நாத் கோயங்கா விருது’ மூலம் கிடைத்த பரிசுத் தோகை ரூ.1 இலட்சத்துடன் ரூ. 10 ஆயிரம் சேர்த்து, ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை இந்தக் கல்லூரிக்கு வழங்கினார். இதழியல் துறையில் முன்னோடியாக விளங்கிய தினமணி முன்னாள் ஆசிரியர் இராம.சம்பந்தம் நினைவு அறிக்கை அமைக்க அந்தத் தொகையை வழங்கினார்.
பன்னாட்டு ஒப்பந்தங்கள்
இந்த நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு (Post Graduate Diploma in Journalism) 2025 –2026 கல்வியாண்டு முதல் தொடங்கவும் திட்டமிடப்பட்டது. குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி யிலும் இங்கு பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.
அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டன. பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களுடனும் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்து, மாணவர் சேர்க்கை நடத்தியது.
அதையடுத்து, 2025 ஆகஸ்ட் அன்று. சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை கோட்டூர்புரத்தில் தொடங்கி வைத்து, இக்கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார் தி.மு.க. தலைவர்.
இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
பல்லூடக வகுப்பறை வலை ஒலி, படத் தொகுப்பு அறை, ஒருங்கிணைந்த செய்தி அறை, வீடியோ மற்றும் ஸ்டுடியோ கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகளும், வெளி மாவட்ட மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் வசதியும் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர்.
தவறான தகவல்களைக் கண்டறிந்து புறந்தள்ளவும், தரவுகளின் அடிப்படையில் செய்திகளை வழங்கவும் இதழாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பணி செய்துகொண்டிருக்கும் இதழாளர்களுக்குப் புதிய சவால்களையும் யதார்த்த நிலைகளையும் சமாளிக்கும் வகையில், சமகாலத்துக்கு ஏற்ற பயிற்சி அளிப்பது, நெறி சார்ந்த உயர்ந்த தரம், துல்லியம், நேர்மை, பொறுப்புடைமை ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கும் இதழாளர்களை உருவாக்குவது என்பதுதான் இந்த இதழியல் கல்வி நிறுவனத்தின் நோக்கம். இந்தக் கல்வி நிறுவனம் உருவாக்கும் மாணவர்கள், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்குச் சிறந்த பங்களிப்பைச் செய்யட்டும் – அதுவே ‘திராவிட மாடல்’ அரசின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி: ‘முரசொலி’ – 25.5.2026
