சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை வாரம் 2 நாள் அவசர வழக்குகள் விசாரணை

1 Min Read

சென்னை, மே 2- சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு, மே 1 முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது.

இந்த விடுமுறை காலத்தில் முதல் வாரத்தில் மே 4 திங்கட்கிழமை, மே 5 செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் மே 6 புதன், மே 7 வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும். மே மாதத்தின் பிற வாரங்களில், திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம்; அந்த மனுக்கள் புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் கடைசி வாரத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும்.

அவசர வழக்குகளை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில், மே 6, 7ஆம் தேதிகளில் நீதிபதிகள் எஸ்.சவுந்தர், எல்.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜியும், மே 13, 14ஆம் தேதிகளில் நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, பி.தனபால், என்.செந்தில்குமாரும் 20, 21ஆம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன், ஆர்.சக்திவேலும் 27, 29ஆம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முகமது சபீக், வி.லட்சுமிநாராயணனும் விசாரிப்பர்.

மதுரை கிளையில் மே 6, 7ஆம் தேதிகளில், நீதிபதிகள் பி.வேல்முருகன், எஸ்.சிறீமதி, சி.குமரப்பன், மே 13, 14ஆம் தேதிகளில் ஜி.கே.இளந்திரையன், கே.கே.ராமகிருஷ்ணன், கே.ராஜசேகர் 20, 21ஆம் தேதிகளில் நீதிபதிகள் டி.பரதசக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், ஆர்.பூர்ணிமா 27, 29ஆம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கே.முரளி சங்கர், பி.வடமலை ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *