டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி – மம்தா கட்சிக்கு வீழ்ச்சி!
* தமிழ்நாடு தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக.!
* கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி – இடதுசாரிகளுக்கு தோல்வி!
* அசாமில் தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜக – காங்கிரசுக்கு கடும் சரிவு
* புதுச்சேரியில் மீண்டும் என்ஆர்.காங். பாஜக கூட்டணி ஆட்சி: 5ஆவது முறை முதலமைச்சர் ஆகிறார் ரங்கசாமி திமுக 5, தவெக 3 இடங்களில் வெற்றி
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அசாம், வங்காளத் தேர்தல்களை தேர்தல் ஆணை யத்தின் துணையுடன் பா.ஜ.க. ‘திருடி விட்டது’ என ராகுல் காந்தி குற்றச்சாட்டு; மம்தாவின் குற்றச்சாட்டுக்கு ஆதரவு.
தி இந்து:
* தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி 27 தொகுதியில் போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டுமே வெற்றி: நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, வானதி சீனிவாசன் மண்ணைக் கவ்வினர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘நெறிமுறையற்றது, சட்டவிரோதமானது’: 100-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக ‘கொள்ளை அடித்து விட்டது’ என மம்தா குற்றச்சாட்டு; ‘மீண்டு வருவோம்’ என உறுதி.
* தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு; அந்த கூட்டணியை த.வெ.க. எவ்வாறு ஒருங்கிணைக்கப் போகிறது என்பது சாத்தியக்கூறுகளும் சவால்களும் நிறைந்த ஒரு புதிராகவே நீடிக்கிறது.
– குடந்தை கருணா
