புதுடில்லி, ஏப்.29 கோடை வெப்பம் தீவிரம டைந்து வரும் நிலையில், வெப்ப அலைகளிலி ருந்து மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 21 மாநில அரசு களுக்கும் டில்லி நிர்வாகத்துக்கும் கடி தம் எழுதியுள்ளது.
2019 முதல் 2023 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும் வெப்பநோய் மற் றும் கடும் வெப்பம் காரணமாக நாடு முழு வதும் 3,712 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் பதிவு செய்துள்ளது.
இந்த புள்ளிவிவ ரத்தை மேற்கோள் காட்டிய ஆணையம், இனியும் தாமதிக்க முடியாது என வலி யுறுத்தியுள்ளது.
உடல்நலக் குறைவுடன் வாழ்வாதார இழப்பும், தீ விபத்து போன்ற இடர்களும் இந்த காலகட்டத்தில் அதிக ரிக்கின்றன என்று ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது. என்ன செய்ய வேண்டும்? தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை யத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிவாரண நடவடிக்கைகளை உடனடி யாக செயல்படுத்த வேண்டும் என்று கூறி யுள்ள ஆணையம், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ் தான் உள்பட 21 மாநிலங்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
