தாராளமாகப் புழங்கும் கலப்படப் பொருள்கள்

1 Min Read

புதுடில்லி, ஏப்.29 கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தியாவின் பல் வேறு மாநிலங்களில் கலப்படப் பொருட்கள் தொடர்பான நட வடிக்கைகளில் பெரும் அளவிலான போலி உணவு, மருந்து மற்றும் அன்றாடப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தலைநகர் டில்லியில் போலி சென் சோடைன் பற்பசை தயாரித்த ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது.

நடவடிக்கையில் 1,800 போலி பற்பசை டியூப்கள், 10,000–க்கும் மேற்பட்ட காலி டியூப்கள், 130 கிலோ கலப்பட மூலப் பொருட்கள் என பெரும் அளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அதே நகரில் மற்றொரு நடவடிக்கையில் செரிமான மருந்தான ஈனோவின் ஒரு லட்சம் போலி பாக்கெட்டுகளும், 50,000 போலி நெஸ்கஃபே காபி பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

உணவு, மருந்து கலப்படம்

அயோத்தியாவில் 500 பெட்டிகள் அள விலான போலி ஃபார்ச்சூன் சமையல் எண்ணெய் கைப்பற்றப்பட்டன.

அரியானாவில் சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் மவுன்ஜாரா ஊசி மற்றும் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையில், இதற்கான மூலப் பொருட்கள் சீன இணைய வணிக நிறு வனமான அலிபாபா மூலம் கொள்முதல் செய்யப்பட்ட தாகத் தெரியவந்துள்ளது.

மீரட்டில் 2,800 கிலோ போலி வெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. பால் பயன்படுத்தாமல் ரசாயனங்கள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வெண்ணெய், டில்லியிலுள்ள பல கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

போலி நெய்

செயற்கை மாம்பழம் சூரத்தில் 2,029 கிலோ போலி நெய் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்தக் கலப்பட நெய் ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும். அய்தராபாத்தில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 200 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டன.

பற்பசை முதல் இன்சுலின் ஊசி வரை, வெண்ணெய் முதல் மாம்பழம் வரை இத்த கைய கலப்படங்கள் மக்களின் உடல் நலத்தை மட்டுமல்ல, உயிரையும் பணயம் வைக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *