தாம்பரம், ஏப். 28- 23.4.2026 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலைய விற்பனையாளர் ஜெ.சாந்தாவின் ஜெ.கோமதியின் தந்தையுமான தா.ஜெய்கணேஷ் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமையில் ஆ.தாமோதரன், தா.இலட்சுமி, தா.ஜோதி, ச.சாந்தி, தா.ஜெனார்த்தனன், ஜெ.ரம்யா, ஜெ.ஜெஸ்மீகாசிறீ மற்றும் ஜெ.தக்ஹித் சாய் ஆகிய குடும்பத்தினர் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், பசும்பொன், மு.நாகவல்லி, நூர்ஜகான், அருணா பத்மாசூரன், கு.மீனாட்சி, இரா.சு.உத்ரா, அ.அணுசக்தி, பி.சி.ஜெயராமன், பூவை.தமிழ்ச்செல்வன், அ.கருப்பையா, அரும்பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சீ.லட்சுமிபதி, கோ.பழனிசாமி மற்றும் ப.அஜய் ஆகியோர் வருகை தந்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜெ.சாந்தா மற்றும் ஜெ.கோமதி ஆகியோர் நன்றி பாராட்டினர்.

