மேற்கு வங்கம் – இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ‘‘100 இடங்களைத் தாண்டிவிட்டோம்’’ – மம்தா அதிரடி!

1 Min Read

கொல்கத்தா, ஏப்.28 தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித் துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. 152 தொகுதிகளுக்கான முதற் கட்டத் தேர்தல் கடந்த 23-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், எஞ்சிய 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் (27.4.2026) நிறை வடைந்தது. இரண்டாம் கட்டத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.

பாஜக: பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரப்பிரதேசம், அசாம் மாநில முதல மைச்சர்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ்: அக்கட்சி யின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிரமாகப் வாக்கு சேகரித்தார்.

மம்தாவின் பேச்சு: பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று (27.4.2026) தான் போட்டி யிடும் பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர்  மம்தா உரையாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது: “முதற்கட்டமாக 152 தொகுதிகளில் நடந்த தேர்தலிலேயே திரிணாமுல் காங்கிரஸ் 100 இடங்களைக் கடந்துவிட்டது. எஞ்சிய 142 தொகுதிகளிலும் மக்கள் எங்களுக்கு வாக்களித்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம்.”

மேலும், பாஜக பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாகவும், மேற்கு வங்கத்தைப் பிரிக்க முயற்சிப்பதாகவும் அவர் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.  இரண் டாம் கட்டத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக பவானிபூர் உள்ளது. இங்கு முதல மைச்சர் மம்தாவை எதிர்த்து, பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுவதால் தேர் தல் களம் தகித்து வருகிறது.

நேற்று (27.4.2026) மாலை 6 மணியுடன் அனைத்துப் பிரச்சாரங்களும் நிறைவ டைந்த நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு  நாளை (29.4.2026) நடைபெறவுள்ளது. முதற்கட்டத் தேர்தலில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *