கொடைக்கானல் ஏரிச்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி

2 Min Read

உடன் ஒளிப்படம் எடுத்தும், கைகுலுக்கியும் பொதுமக்கள் உற்சாகம்

கொடைக்கானல், ஏப். 27- கொடைக் கானலில் குளுமையான கால நிலையை அனுபவித் தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.2.2026) காலை தனது குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி மேற் கொண்டார்.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைப் பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சருடன், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உற்சாகமாக உடன் ஒளிப்படம்  (செல்பி) எடுத்து மகிழ்ந்தனர். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட் பாளர்களை ஆதரித்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

கொடைக்கானலில் நடைப்பயிற்சி

கடந்த 23ஆம் தேதி, வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சுமார் ஒரு மாத காலமாக சூறாவளி பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், சிறிது ஓய்வுக்காக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தனது குடும்பத்தி னருடன் நேற்று முன்தினம் (25.4.2026) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந் தார். அங்கிருந்து காரில் பிற்பகல் கொடைக்கானல் வந்த முதலமைச்சர், குடும்பத்தினரை, திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பூச்செண்டு, புத்தகங்கள் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.

பின்னர் அவர் பிரபல விடுதிக்கு சென்று தங்கினார். பொதுவாக, முதலமைச்சர் எங்கு சென்று தங்கினாலும் காலையில் நடைப்பயிற்சி செய்வதை தவற விடுவதில்லை. அந்த வழக்கப்படி, கொடைக்கானலிலும் நேற்று (26.4.2026) அதிகாலையில் அவர் நடைப்பயிற்சி சென்றார். கொடைக்கானல் நகரின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி பகுதியில் 10 டிகிரி செல்சியஸ் முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை நிலவும் குளுமையான காலநிலையில், அழகான ஏரியை கண்டு ரசித்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி செய்தார்.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நட்சத்திர ஏரியைச் சுற்றி நடந்து சென்றபோது, அதே பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டு உற்சாகமடைந்து, அவருடன் போட்டி போட்டு கை குலுக்கியும், ஒளிப்படம் மற்றும் உடன் ஒளிப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். முதலமைச்சரும் அனைவருடனும் செல்பி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டார்.

தேநீர்க்கடை நடத்தும் தொண்டரிடம் நலம் விசாரிப்பு

திமுக கட்சி தொண்டர் ஒருவர் ஏரிச்சாலையில் தேநீர் கடை நடத்தி வருகிறார். அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்த முதலமைச்சரைப் பார்த்ததும், தனது கடைக்கு வரும்படி அன்புடன் அழைத்தார். முதலமைச்சரும், மறுப்பேதும் தெரிவிக்காமல் அவரது கடையை பார்த்து விட்டு, அந்தக் கட்சித் தொண்டரிடம் நலம் விசாரித்தார். பின்னர் தனது நடைப்பயிற்சியை அவர் தொடர்ந்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *