வேலையிழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் காரணம் என்ன? பரபரப்பு தகவல்

3 Min Read

உலக அளவில் புகழ்பெற்ற
பெரிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு

புதுடில்லி, ஏப். 27- பொருளாதார மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் இப்போது தங்களை மறுசீரமைப்பு செய்து வருகின்றன. அந்த வரிசையில், சமூக சேவை மற்றும் விளையாட்டுத் துறை என இரு வேறு தளங்களில் இயங்கும் கேட்ஸ் அறக்கட்டளையும் நைக்கியும் இப்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

உலக அளவில் புகழ்பெற்ற இரண்டு மாபெரும் நிறுவனங் களான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Gates Foundation) மற்றும் நைக்கி (Nike) ஆகியவை தங்களின் பணி யாளர் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது பன்னாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செலவுகளைக் குறைப்பது மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைப்பது போன்ற காரணங்களால் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, தனது மொத்த பணியாளர்களில் 20 சதவீதத் தினரை (சுமார் 500 பேர்) பணியில் இருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை 2026-ஆம் ஆண்டிற்காக 9 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியிருந்தாலும், நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தப் பணிநீக்க நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் ஆரோக்கியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) போன்ற புதிய துறைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதால், பழைய கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

நைக்கி நிறுவனத்தின் அதிரடி:
1,400 பணியிடங்கள் காலி!

விளையாட்டு ஆடைகள் மற்றும் காலணிகள் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நைக்கி நிறுவனம், தனது உலகளாவிய செயல்பாடுகளில் இருந்து சுமார் 1,400 பணியாளர்களை நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியா ளர்களில் சுமார் 2 சதவீதமாகும்.

ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் 775 பேரை நீக்கியிருந்த நிலையில், இது இரண்டாவது கட்ட ஆட்குறைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலி பிரிவுகளில் உள்ள சிக்கல்களைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க இந்த “Win Now” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நார்த் அமெரிக்கா, அய்ரோப்பா மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள பணியாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

காரணம் என்ன?

இந்த இரண்டு நிறுவனங் களின் முடிவுகளும் வெவ் வேறு பின்னணிகளைக் கொண்டிருந் தாலும், ஒரு பொதுவான அம்சம் உள்ளது. நிறுவனங்கள் இப்போது மனித உழைப்பை விடத் தொழில்நுட்பத்திற்கும், குறிப்பாக ஏஅய் (ஏஅய்) சார்ந்த பணிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

கேட்ஸ் அறக்கட்டளையைப் பொறுத்தவரை, அடுத்த சில ஆண்டுகளில் அதன் திட்டங்களை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. நைக்கி நிறுவனத்தைப் பொறுத்தவரை, விற்பனை மந்தநிலை மற்றும் சந்தைப் போட்டியைச் சமாளிக்கச் செலவுகளைக் குறைப்பதே ஒரே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பணியாளர்களின்
நிலை என்ன?

திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைநீக்கம், பல ஆண்டு களாகத் தங்களின் உழைப்பை வழங்கிய பணியாளர்களுக்குப் பெரும் கவலையை அளித் துள்ளது. இருப்பினும், பாதிக்கப் பட்டவர்களுக்குத் தகுந்த இழப்பீடு மற்றும் அடுத்தகட்ட வேலைவாய்ப்பிற்கான ஆலோ சனைகள் வழங்கப்படும் என்று நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் என்று நிர்வாகங்கள் நம்பினாலும், சாமானிய பணியாளர்களுக்கு இது ஒரு சவாலான காலக்கட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *