ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திரபாபு அதிரடி உத்தரவு!

2 Min Read

அமராவதி, ஏப்.27 ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தர விட்டுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அவசரம் அவசரமாக எரிபொருளைச் சேமித்து வருவதால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு வருகின்றன. இது குறித்த புகார்களை அடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசரத் தொலைபேசி ஆலோசனை நடத்திய முதலமைச்சர், தட்டுப் பாட்டைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகள் முதலமைச்சரிடம் வழங்கிய தகவலின்படி, மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 4,510 எரிபொருள் நிலையங்களில் சுமார் 421 பங்குகள் தற்போது மூடப்பட்டுள்ளன. வழக்கமான நாட்களில் மாநிலத்தின் சராசரி நாள்தோறும் விற்பனை 6,330 கிலோ லிட்டர் பெட்ரோல் மற்றும் 9,048 கிலோ லிட்டர் டீசல் என்ற அளவில் இருக்கும் நிலையில், தட்டுப்பாடு குறித்த பொதுமக்களின் அச்சத்தால் இந்தத் தேவை திடீரென அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 25.4.2026 அன்று மட்டும் 8,489 கிலோ லிட்டர் பெட்ரோலும், 10,556 கிலோ லிட்டர் டீசலும் விற்பனையாகியுள்ளது. இத்தகைய பீதி கொள்முதல் காரணமாக விநியோகம் அதிகரிக் கப்பட்ட போதிலும், பல இடங்களில் கையிருப்பு வேகமாகத் தீர்ந்து நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. மேலும், மீன்வளத் துறையினர் பேரல்களில் மொத்தமாக எரி பொருளை வாங்கிச் சேமிப்பதும் இந்த நெருக்கடிக்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் அளித்த மாநில குடிமைப் பொருள் வழங் கல் துறை அமைச்சர் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும், விநி யோகச் சங்கிலியில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மட்டுமே ஒரு சில பங்குகள் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் தேவையின்றி அச்சப்பட்டு எரிபொருளைக் குவித்து வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், இந்தச் சூழலைப் பயன்படுத்தி யாராவது கள்ளச்சந்தையில் எரிபொருளை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *