வாசிங்டன், ஏப். 26- ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
வெள்ளை மாளிகை யில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
ஈரான் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலவீனமாக உள்ளதாக டிரம்ப் கூறி னார். அணுகுண்டு போடும் திட்டம் இல்லை. கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தம்மை அவசரப்படுத்த வேண்டாம் என்றார்.
போரை நிறுத்த 6 வாரங்களாக முயற்சி செய் வதாகவும் தெரிவித்தார்.
அமைதி ஒப்பந்தத்தை ஏற்றால் தான் ஹார்மூஸ் நீரிணை வழியே ஈரான் கப்பல்கள் பயணிக்க முடியும் என்றும் குறிப் பிட்டார். ஈரானின் முக்கிய தலைவர்கள் தற்போது உயிரோடு இல்லை என்றும் கடற்படை மற்றும் விமானப்படை அழிந்துவிட்டன என்றும் டிரம்ப் கூறினார்.
