மேற்குவங்க பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் சுட்டுக்கொலை..!

0 Min Read

கொல்கத்தா, மே 8 மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறியப்படும் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத்தை, அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

கொல்கத்தா அருகே மத்யம்கிராம் பகுதியில் காரில் சென்றபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதில், 3 குண்டுகள் பாய்ந்து சந்திரநாத் உயிரிழந்துள்ளார்.

சுவேந்து அதிகாரியின் நிழல் போல செயல்பட்டுவந்த அவரது பி.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *