பெங்களூரூ – புதுச்சேரி – அய்தராபாத் மீண்டும் பெங்களூரு செல்லும் வகையில் இண்டிகோ நிறுவனம் சிறிய ரக விமானத்தை இயங்கி வந்தது.
இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் கூடுதல் விமான சேவையை வரும் மே 1ஆம் தேதி முதல் இயக்குகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரிக்கு இண்டிகோ நிறுவனம் புதிய விமான சேவைகளை வரும் மே 1ஆம் தேதி முதல் இயக்குகிறது. பெங்களூருவில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 11.15க்கும், புதுச்சேரி வந்தடையும். அந்த விமானம் புதுச்சேரியில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு காலை 12.15 மணிக்குச் சென்றடையும்.
ராஜமுந்திரியில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் விமானம் அய்தராபாத்துக்கு காலை 11.15 மணிக்கு சென்றடைந்து அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மதியம் 1. 40 மணிக்கு வந்தடையும்.
