புதுடில்லி, ஏப்.25 இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில் இரண்டு சதவீதம், அதாவது 29,608 பணியாளர்களை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2026 ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி, தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. புதிய ரயில்கள் மற்றும் கூடுதல் வழித்தடங்கள் உருவாக்கப்படும் சூழலில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ரயில்வே பாதுகாப்பைப் பாதிக்கும் என ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

