குழப்பத்தை உருவாக்கவே தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் இணைக்கப்பட்டன என்.ராம் குற்றச்சாட்டு

3 Min Read

சென்னை, ஏப்.24- தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், குழப்பத்தை உருவாக்கி எதிர்க் ட்சிகளைப் பழிவாங்கும் நோக்கத்தில் மட்டுமே ஒன்றிய அரசு இவ்விரண்டையும் இணைத்ததாகவும் ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் தெரிவித்தார்.

சென்னை சிந்தனையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த, “தமிழ்நாட்டிற்குப் பெரிய வெற்றி! ஒன்றிய அரசுக்குத் தோல்வி!! எப்படி மற்றும் ஏன்?” என்ற கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சுட்டிக்காட்டியது போல, தொகுதி மறுசீரமைப்பு என்ற திட்டத்தை மறைப்பதற்கு மகளிர் இடஒதுக்கீடு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இவ்விரண்டுக்கும் எந்தக் காரணத்தாலும் தொடர்பில்லை.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருந்த சூழலில், இந்தியா கூட்டணியைப் பிளவுபடுத்தவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு திட்டமிட்டது. ஒன்றிய அரசின் இந்தத் திட்டத்தின் ஆபத்துக்களைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, அதனைச் சரியான மேடைகளில் எதிரொலித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை என். ராம் பாராட்டினார். 197 இல் கொண்டுவரப்பட்டு, 2001 இல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நீட்டிக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பு முடக்கம், ஒரு சமரசத்தின் அடிப்படையில் உருவானது.

ஆனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவமும், வெற்றிகரமாகத் திட்டங்களைச் செயல்படுத்திய மாநிலங்களுக்குப் பாதிப்பும் ஏற்படும் வகையில் இந்த மறுசீரமைப்பு திட்டமிடப்பட்டது. குறிப்பாக, 2029 தேர்த லுக்கு முன்பே, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடக்கும் முன்னரே இதனைச் செய்து, ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக தங்களுக்குச் சாதகமான இடங்களைப் பெற முயன்றது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அடைந்த தோல்வி,  தமிழ்நாட்டின் வெற்றி மட்டுமல்ல; இந்தியா கூட்டணிக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும், ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ. இராசா,  தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடு என்றும், நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே உரிய நடை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“மக்களவை இடங்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் எல்லைகளை வரைமுறை செய்வது தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் பணியே தவிர, தனிநபர்களான அமித் ஷாவோ அல்லது நரேந்திர மோடியோ அல்ல” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். இந்நிகழ்ச்சியில் சென்னை சிந்த னையாளர் மன்றத்தின் செயலாளர் விஜயா தாயன்பன் மற்றும் துணைத் தலைவர் குணாநிதி அமிர்தம் ஆகியோரும் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

‘சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் மிக ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை!’

அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு

புதுடில்லி, ஏப்.24 மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அய்-பேக் அலுவலகத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அம்மாநில முதலமைச்சர் மம்தா, மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றிச் சென்ற வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, நீதிபதி என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன் நேற்று (23.4.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘மேற்கு வங்கத்தில் அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைந்துவிட்டது” என வாதாடினார். அதன் பிறகு மழுப்பலாக,”தாங்கள் அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைந்துவிட்டது என உரிமை கோரவில்லை. அய்-பேக் விசாரணையின் போது சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டது தொடர்பான புகாரில் மட்டுமே தங்கள் வழக்கு கவனம் செலுத்துகிறது. சட்டம்– ஒழுங்கு தோல்வி குறித்த குறிப்புகளைப் பிரிவு 356-அய் (குடியரசுத் தலைவர் ஆட்சி) அமல்படுத்துவதற்கான கோரிக்கை யாகக் கருதக்கூடாது” என்று கூறினார்.

இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,‘‘அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைந்து விட்டதாகக் கூறுவது ஒரு மாநி லத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்கும். இது மிகவும் தீவிரமான அரசியல மைப்பு விவகாரம். நீங்கள் வாதிடும் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் மிக ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. நீங்கள் அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைந்துவிட்டதாகக் கூற வில்லை என நம்புகிறோம்” என காட்டமாகக் கூறினர்.

தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரல், “அமலாக்கத்துறை அவ்வாறு எந்தக் கோரிக்கை யையும் முன்வைக்கவில்லை. சட்டத்தின் ஆட்சி மற்றும் பிரிவு 14 ஆகியவற்றின் அடிப்படையிலேயே தங்கள் மனு அமைந்துள்ளது” என்று கூறினார். இதனையடுத்து வழக்கை அடுத்த வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *